Saturday, December 26, 2009

மனிதத் தன்மையே அற்ற மருத்துவர்!


அது கத்தியவார் கிராமத்தில் உள்ள ஒரு தீண்டத்தகாத ஆசிரிய-ரின் வழக்கு. காந்தியால் வெளியிடப் பட்டு வரும் யங் இந்தியா என்றும் பத்திரி-கையின் 1929 டிசம்பர் 12 ஆம் தேதிய பதிப்பில் கீழ்க்கண்ட கடிதம் வெளியிடப்பட்டது. குழந்தை பெற்றிருந்த தனது மனைவிக்கு ஒரு மருத்து-வரை மருத்துவம் பார்க்கச் செய்ய, தான் எதிர்கொண்ட இடையூறுகளை அக்கடி-தத்தில் வெளிப்படுத்தியிருந்த அவர், தனது மனை-வியும், குழந்தையும் மருத்துவ உதவி-யின்றி எவ்வாறு இறக்க நேர்ந்தது என்பதையும் கூறியிருக்கிறார். அக் கடிதம் கூறுவதாவது:
இந்த மாதம் 5 ஆம் தேதி என் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. 7 ஆம் தேதியன்று உடல் நலமிழந்த என் மனைவிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அவளது பலம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது; அவளது மார்பு விங்கிக் கொண்டது. மூச்சு விடுவதற்கே துன்பப்பட்ட அவளது மார்-பெலும்புகளில் தாங்கமுடியாத வலி ஏற்-பட்டது. நான் ஒரு மருத்துவரை அழைக்கச் சென்றேன். ஆனால் தான் ஒரு அரிஜன் வீட்டிற்கு வரமாட்டேன் என்று கூறிய அவர் எனது குழந்தையையும் பரிசோதனை செய்து பார்க்கத் தயாராக இல்லை. பின்னர் நாகர்சேத் மற்றும் கராசியா தர்பாருக்குச் சென்ற நான் எனக்கு உதவும்படி வேண்டினேன். மருத்து-வருக்கான மருத்துவக் கட்டணம் இரண்டு ரூபாயை முழுமையாக நான் கொடுப்பதற்கு நாகர்-சேத் பிணையாக நின்றார். பின்னர் மருத்துவர் வந்தார்; ஆனால் ஒரு நிபந்தனை-யின் பேரில். அரிஜன் காலனிக்கு வெளியே-தான் நோயாளியைச் சோதனை செய்வேன் என்பது-தான் அந்த நிபந்தனை. பிறந்த குழந்தையுடன் என் மனைவியை அரிஜன் காலனிக்கு வெளியே கொண்டு வந்தேன். பின்னர் மருத்துவர் ஒரு தர்மாமீட்டரை ஒரு முஸ்லிமிடம் கொடுக்க, அந்த முஸ்லிம் அதனை என்னிடம் கொடுத்தார். என் மனைவி-யிடம் கொடுத்த நான் பின்னர் அதைத் திரும்பப் பெற்று முஸ்லிமிடம் கொடுத்தேன். அந்த முஸ்லிம் அதை மருத்துவரிடம் கொடுத்-தார். அப்போது இரவு எட்டுமணி ஆகி-விட்டது. ஒரு விளக்கு வெளிச்சத்தில் அந்த தெர்மாமீட்டரைப் பார்த்த மருத்துவர் நோயாளி நிமோனியா நோயால் துன்புறுவ-தாகக் கூறினார். பின்னர் அங்கிருந்து சென்ற மருத்துவர் மருந்து அனுப்பி வைத்தார். சிறிது ஆளி விதைகளை நான் கடைத் தெருவிலிருந்து வாங்கி வந்து நோயாளி மீது அதைப் பயன்-படுத்தினேன். மருத்துவருக்கு இரண்டு ரூபாய் கட்டணத்தை நான் கொடுத்த பிறகும், மறுபடியும் நோயாளியை வந்து பார்க்க அவர் மறுத்துவிட்டார். அந்த நோய் மிகவும் ஆபத்-தானது; கடவுள் மட்டுமே எங்களுக்கு உதவ முடியும். எனது வாழ்க்கையின் ஒளி அணைந்து-விட்டது. அன்று பிற்பகல் இரண்டு மணி அளவில் என் மனைவி இறந்து-விட்டாள்.
அந்தத் தீண்டத்தகாத ஆசிரியரின் பெயர் கொடுக்கப் பட்டிருக்கவில்லை. அதே போல அந்த மருத்துவரின் பெயரும் அதில் குறிப்-பிடப்பட்டிருக்கவில்லை. பெயரைக் குறிப்-பிட்டால் பழிவாங்கும் செயல்கள் எழலாம் என்ற அந்தத் தீண்டத்தகாத ஆசிரியரின் அச்சத்தினால் பெயரைக் குறிப்பிடவேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதே அதன் காரணம். ஆனால் அதில் குறிப்பிடப்பட்ட உண்-மைகள் மறுக்க முடியாதவை.
இதற்கு எந்த விளக்கமும் தேவையில்லை. நோய்வாய்ப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருக்கும் நோயாளிக்கு தெர்மா-மீட்டர் வைத்து சோதனை செய்ய அந்த மருத்துவர், படித்தவராக இருந்தும் கூட, மறுத்துள்ளார். அந்தப் பெண்மணிக்குச் சிகிச்சை செய்ய அவர் மறுத்ததன் காரணமாக அந்தப் பெண்மணி இறந்துபோனார். அவரது தொழில் அவருக்கு விதித்துள்ள கடமையைப் புறக்கணிக்கிறோம் என்ற வருத்தமோ உணர்-வோ அந்த மருத்துவர் கொண்டிருக்க வில்லை. ஒரு தீண்டத்தகாதவரைத் தொடு-வதை விட மனிதத் தன்மையே அற்றவனாக இருப்பதையே ஓர் இந்து விரும்புகிறான்.
(அம்பேத்கரின் விசாவுக்காக காத்திருக்கிறேன் நூலிலிருந்து)

கலகலப்பாய் ஒரு கலகக்குரல்!!!


நடிகவேள் எம்.ஆர். இராதாவுக்கும், திருச்சிக்கும் ஏகப்பட்ட தொடர்பு உண்டு. தமிழக நாடக வரலாற்றில், ஒரு நாடகம் சற்றொப்ப 3500 முறை நடத்தப்பட்டது என்றால் அது எம்.ஆர். இராதாவின் இரத்தக் கண்ணீர் மட்டும்தான். அதுமட்டுமல்ல, அது நாடகமாக வந்து, திரைப்படமாக வந்த பிறகும், அது நாடகமாக நடிக்கப்பட்டது.
எம்.ஆர். இராதா நல்லவேளை திரைப்படங்-களில் நடித்தார். ஒருவேளை அவர் திரைப்-படங்களில் நடிக்காமல் போயிருந்தால் அவர் எப்படி நடிப்பார் என்று நமக்குத் தெரியாமல் போயிருக்கும். எம். ஆர். இராதா சொல்லும் போது, நான் ஒய்வு பெற்ற பிறகுதான் திரைப்படங்களுக்கு வந்தேன் என்றார்.எம்.ஆர். இராதா திரைப்படங்களை இளைஞர்கள் கூர்ந்து பார்க்க வேண்டும். சிவாஜிகணேசன் நடித்த படங்களில் இராதாவின் நடிப்பு மிக அற்புதமாக இருக்கும். தமிழ்நாட்டின் கதாநாயகன்தான் உண்மை-யான தமிழ்ச் சமூகத்தின் வில்லன். தமிழ்ச் சமூகத்தின் நல்லவன்தான் உண்மையான தமிழ்ச் சமூகத்தின் கதாநாயகன். நீங்கள் தமிழ்த் திரைப்படங்களை தொடர்ந்து கவனித்து இருந்தால், கன்னட நாட்டில் பிறந்த நடிகை கண்ணாம்பாள் சுத்தத் தமிழ் பேசுவார். சிவாஜி கணேசன் ஏறக்குறைய கர்ஜனை செய்வார். எஸ்.எஸ். இராஜேந்திரன் தமிழ் ஏறக்குறைய வீணை வாசிப்பது போல சுத்தமாக இருக்கும். பி.எஸ்.வீரப்பா மீட்டர் கணக்கில் சிரிப்பார். தமிழ்த் திரைப்படங்கள் முழுவதும் தூய தமிழ் பேசிய போது, தமிழ்நாட்டின் ஒரே ஒரு தமிழ் நடிகன்தான் மக்கள் தமிழ் பேசினான்; கொச்சைத் தமிழ் பேசினான். இதிலிருந்து வரலாறு என்ன பதிவு செய்திருக்கிறது என்றால், திரைப்படங்களில் தூய தமிழ் பேசியவர்களால் சமூகத்திற்குப் பயன்ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் கொச்சைத் தமிழ் பேசிய இராதாதான் தமிழரைச் சுத்தமாக்கினார் என்பது தமிழகத்தின் வரலாறு. எம்.ஆர். இராதா முன்னிறுத்திய அற்புதமான செய்தி என்னவெனில், அவர் கலையுலகில் ஒரு கலகக்குரல். நீங்கள் நன்கு பதிவு செய்து கொள்ளுங்கள். எம்.ஆர். இராதா தமிழ்ச் சமூகத்தின் கலகக்குரல், அல்லது கலகம் செய் என்று சொன்னவர். உண்மையிலேயே ஒரு பெயரைச் சொன்னால் இந்த நாடு அதிர்ந்தது என்று சொன்னால், அது எம்.ஆர். இராதாவின் பெயர்தான்.எம்.ஆர். இராதாவைப் போல பிம்பங்களை உடைத்தவர் நாடக உலகிலும், திரையுலகிலும் எவருமே இல்லை, வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் அவர் நடித்த காட்சியை, அவர் பாடலைக் கேட்டுப் பாருங்-கள். ஓர் ஆழ்ந்த கலகம் அவரின் நடவடிக்கை முழுவதும் இருந்தது. அதே போல அவரிடம் இருந்த துணிச்சலும் அற்புதமானவை.
இன்றைக்கு இராமர் பிரச்சினை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எந்தப் பாதுகாப்பும் இல்லாத ஒரு கலைஞனாக இருந்த இராதா திருச்சியில்தான் நாடகம் போட்டார் தேவர் மன்றத்தில். மன்றத்திற்கு வெளியே ஒரு சுவரொட்டியும் ஒட்டினார். அதில் உள்ளே வராதே என எழுதியிருந்தார். என் நாடகத்தைப் பார்த்து யாருக்காவது மனம் புண்பட்டால் அவர்கள் என் நாடகத்திற்கு வரவேண்டாம் எனக் கூறியிருந்தார். இது எவ்வளவு பெரிய மேதைமை தெரியுமா! எம்.ஆர். இராதாவுக்கு இராமன் என்கிற சித்திரத்தின் பிம்பத்தைத் தூளாக்க வேண்டும். எப்படி ஆக்குவது மணிக்கணக்காகப் பேசியா? அது ஒன்றும் பெரிய விசயமில்லை. அதைப் பேச்சாளர் பேசிவிட்டு போயிடுவார். கலைஞனுக்கு அது தேவையில்லை. நீங்கள் இராதாவைநுட்பமாகக் கவனிக்க வேண்டும். நாடகமேடையில் இராமாயண நாடகத்தின் போது, 2 பக்கமும் இராமாயணம் தொடர்பான ஆராய்ச்சி நூல்களை அடுக்கி வைத்திருக்கிறார். இந்த நாடகத்தில் வருகிற காட்சிகள் மீது சந்தேகம் வந்தால் இந்தப் புத்தகங்களில் அதற்கு பதில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு நாடகம் போடுகிறார். இன்றைக்கு பிம்பங்களை உடைப்பது தமிழ்நாட்டின் மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. சாதாரண சிறிய நடிகர் கூட பெரிய பிம்பத்தை வைத்திருக்கிறார். ஆனால் எம்.ஆர். இராதா பிம்பங்களை உடைக்கும் அற்புதமான காரியங்களைச் செய்தார்.ஒரு சமயம் இரத்தக் கண்ணீர் நாடகத்தைத் திரைப்படமாக்க வேண்டுமென நேசனல் பிக்சர்ஸ் பெருமாள் எம்.ஆர். இராதாவிடம் வருகிறார். எம்.ஆர். இராதா 5 திரைப்படங்களில் நடித்து முடித்து-விட்டு மீண்டும் நாடகத்தில் நடிக்க வந்தவர். பொதுவாக நாடகத்தில் நடித்தவரெல்லாம் திரைப்படத்திற்குப் போனதுதான் வரலாறு. ஆனால் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து, நாடகத்திற்கு வந்த ஒரே கலைஞர் எம்.ஆர்.இராதாதான். மறந்துவிடக் கூடாது!
இரத்தக் கண்ணீரைத் திரைப்படமாக்க வேண்டும் என பெருமாள் சொன்னபோது, எம்.ஆர். இராதா 3 நிபந்தனைகளை வைக்கிறார். ஒன்று, தினமும் நாடகம் நடத்தி முடித்து, இரவு 12 மணிக்கு மேல்தான் படத்தில் நடிக்க வருவேன். இரண்டு இரத்தக் கண்ணீர் நாடகத்தின் இறுதியில் தன் மனைவியை தன் சகநண்பனுக்குத் திருமணம் முடிப்பதை கண்டிப்பாய் காட்சியில் இடம் பெறச் செய்ய வேண்டும். மூன்றாவதாக எனக்கு ஊதியமாக 1,25,000 வேண்டும் என்றார். நாடகக் கலைஞனாக இருந்து உச்சநிலையில் இருந்தவர் அவர்.
இராமயண நாடகத்தில் இராமனாக வேடம் போட்டு முதல் காட்சியில் வெளிவருகிறார் எம்.ஆர்.இராதா. வந்ததும் என்ன செய்கிறார் தெரியுமா? ஒரு தூண் மீது கால்களை வைத்துக் கொண்டு சரக், சரக் என சொறிகிறார். பொதுவாக ரசிகர்கள் இப்படி சொறிகிறவர்-களை கதாநாயகர்களாக ஏற்க மாட்டார்கள். ஏன்னா சொறிந்து கொண்டு நிற்பதெல்லாம் சாதாரண ஒரு மனிதனின் வேலை. அப்படி ஒரு கதாநாயகனே சொறியாமல் இருக்கும் போது ஒரு கடவுள் சொறிவாரா? சொறிய முடியாத கடவுளை எல்லாம் சொறிய வைத்தவர் எம்.ஆர். இராதா. மறந்துவிடக் கூடாது! இந்தப் பிம்பங்களை உடைத்தெறிவது என்பது இராதாவின் இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. அவர் சிறுவயது முதலே கலக்காரராகவே இருந்து வந்துள்ளார். டி.ஆர். மகாலிங்கத்தோடு எம்.ஆர்.இராதா சிறுவயதில் நடிக்கிறார். அப்பவெல்லாம் நாடகக் கொட்டகைகளில் பார்ப்பன சிறுவர்களுக்கு ஒரு பந்தி, மற்றவர்-களுக்கு ஒரு பந்தியும் இருந்தது. ஏன் நம்ம கூட இவங்க சாப்பிட மறுக்கிறார்கள்? என இராதா யோசனை செய்கிறார். ஒருமுறை டி.ஆர். மகாலிங்கத்திற்குக் கொடுத்த காபியை எடுத்து பாதி குடித்துவிட்டு, பாதி வைத்து விடுகிறார். அந்தக் காபியை டி.ஆர். மகாலிங்கம் குடித்து-விட்டு உயிரோடு இருப்பதை இராதா பார்க்கிறார். நாம் சாப்பிட்டதை இவர் சாப்பிட்டார் ஒன்றும் ஆகவில்லையே, பிறகு ஏன் ஒன்றாகச் சாப்பிட மறுக்கிறார்? என அவரே பின்னாளில் எழுதினார்.
அன்றைய நாள்களில் நாடகங்கள் தொடங்கு-வதற்கு முன்னால் ஜெனரேட்டருக்கு தீபாரா-தனை காட்டி, சூடம் கொளுத்துவார்கள். அப்படித்தான் நாடகக் கொட்டகை உரிமையாளர் ஒருவர் தீபமெல்லாம் காட்டி-னார். ஆனால் ஜெனரேட்டர் ஒடவில்லை. எம்.ஆர். இராதா ஒரு கார் மெக்கானிக் மற்றும் நல்ல எலக்ட்ரீசியன். நாடகக் கொட்டகை உரிமையாளர் இராதாவிடம் வந்து, ஜெனரேட்ட-ரைச் சரி செய்து தரும்படி கேட்கிறார். -உடனே எம்.ஆர். இராதாவும், சிறிது நேரத்தில் சரி செய்துவிடுகிறார். சரி செய்து விட்டு கொட்டகை உரிமையாளரிடம் சென்று உங்க செருப்பைக் கொஞ்சம் கொடுங்கள் எனக் கேட்கிறார். எதுக்கு? என அவர் கேட்கிறார். இல்லை கொடுங்கள் எனக் கேட்டு வாங்கி இராதா, ஜெனரேட்டரை செருப்பா-லேயே அடிக்கிறார். அடித்துவிட்டு உரிமை-யாளரிடம், இப்போ ஜெனரேட்டரைப் போடுங்கள் என்கிறார். ஜெனரேட்டர் ஓடத் தொடங்கியது. எம்.ஆர். இராதா சொன்னாராம் ஜெனரேட்டர் தீபம் காண்பித்தாலும் ஓடும், செருப்பால் அடித்தாலும் ஓடும் என்றாராம்.
அதேபோல போர்வாள் எனும் நாடகத்தை எழுதிய சி.பி. சிற்றரசை சிலர் பொதுமேடையில் கிண்டல் செய்தனர். எந்த ஊருக்கு சிற்றரசு எனக் கேட்டனர். உடனே இராதாதான் இவர் நாடகத்தில் பதில் சொன்னார். இராஜ-கோபாலாச்சாரியார் என்பவரைச் சக்கரவர்த்தி என்றும் அழைப்பார்கள். அவர் எந்த ஊருக்கு சக்கரவர்த்தியோ, அதற்குப் பக்கத்து ஊருக்குத் தான் எங்காளு சிற்றரசு எனப் பதில் சொன்னார். எம்.ஆர். இராதா குறித்து சிவாஜி ஒருமுறை கூறினார். திரையுலகில் என் முகத்திற்கு அருகே வேறொரு நடிகரின் முகம் வருகிறது என்றால் அதைக் கண்டு அஞ்ச-மாட்டேன். அண்ணன் இராதாவின் முகம் வந்தால் நான் எச்சரிக்கையாக இருப்பேன் என்று சொன்னார்.
பத்திரிகைக்காரர் ஒருவர் இராதாவிடம் ஒரு கேள்வி கேட்டார். இவ்வளவு அற்புதமாக நடிக்கின்றீர்கள், துணிச்சலாக இருக்கின்றீர்கள், இந்நிலையில் நீங்கள் முதலமைச்சர் ஆகிவிட்-டால் என்ன செய்வீர்கள்? எனக் கேட்கிறார்.
இராதா சொல்கிறார், இப்படிக் கேள்வி கேட்பவரையெல்லாம் தூக்கில் போட வேண்டும் என்று சொல்லிவிடுவேன் என்கிறார். என் பிழைப்பு நடிப்பு. உடனே முதலமைச்சர் ஆகிவிட முடியுமா? என்றும் கேட்டார். இன்றைக்கு நடிகர்கள் எல்லாம் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்து-விட்டார்கள். ஒருமுறை பெருந்தலைவர் காமராசர் எம்.ஆர்.இராதாவைப் பிரச்சார பணிக்கு அழைக்கிறார். இராதாவும் ஒப்புக் கொள்கிறார். உடனே இராதாவின் பிரச்சாரச் செலவு-களுக்காக காமராசர் ரூ.10,000 பணத்தை அவரின் வீட்டிற்கு கொடுத்துவிடுகிறார். ஆனால் இராதா பணத்தை வாங்க மறுத்து-விட்டார். அப்போது இராதா சொன்னார். பணத்தை வாங்கிக் கொண்டுதான் பேசுவதாக இருந்தால், இதைவிட அதிக பணம் வைத்-துள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு பேசியிருப்பேன் எனச் சொல்கிறார்.
பிறகு சொன்னார் பெரியார் ஆதரிக்கிறார் என்கிற ஒரே காரணத்திற்காக நானும் ஆதரிக்கிறேனே தவிர வேறொன்றுமில்லை. இதைப் பெருந்தலைவரிடம் சொல்லிவிடுங்கள் எனப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து-விடுகிறார். இதைக் காமராசரிடம் சொன்ன போது தமிழ்நாட்டில் பெரியாரைப் போன்ற தலைவர்கள் இருப்பது மிகுந்த பெருமைக்-குரியது. ஏனெனில் இராதா போன்ற தொண்டர்கள் வேறு யாருக்குக் கிடைத்-திருக்கிறார்கள் என காமராசர் சொன்னார்.
உதகையில் ஒருமுறை திரையரங்கப் படப்பிடிப்பு நடக்கிறது. வேடிக்கை பார்க்க மக்கள் திரளாகக் கூடிவிட்டனர். அப்போ ஒரே சத்தமாக இருக்கிறது. உடனே எம்.ஆர். இராதா என்ன சத்தம்? எனக் கேட்கிறார். நடிகர்களைப் பார்க்க மக்கள் கூட்டமாக வந்துள்ளனர் எனச் சொல்கிறார்கள். உடனே எம்.ஆர்.இராதா அணிந்திருந்த டிராயருடன் வெளியே வருகிறார்.
எம்.ஆர்.இராதா கூட்டத்தினரிடம் கேட்-கிறார், எல்லோரும் எங்க வந்தீங்க? ஒருவர் சொன்னார், நடிகர்களைப் பார்க்கத்தான் வந்தோம் என்கிறார். எல்லோரும் என்னை மாதிரிதான் உள்ளே இருக்காங்க. இப்ப நான், அசிங்கமாக இருக்கிறேனே அதே போல்தான் எல்லோரும் இருக்காங்க. ஏய்! தெரிஞ்சுக்க மேக்கப் போட்டாதான் நல்லா இருப்பாங்க, இல்லைன்னா உங்களைவிட அசிங்கமா இருப்பாங்க எனச் சொல்லி மக்கள் கூட்டத்-தைக் கலைத்துவிட்டார். ஆக, நடிகன் என்கிற பிம்பத்தை உடைத்தார். அதே போல தலைவர்கள் என்கிற பிம்பத்தைத் தூளாக்-கினார். ஆனால் நல்ல விசயத்தைக் கொண்டாடியதில் இராதா மிகச் சிறந்த கலைஞன். என்.எஸ்.கே இறந்து போகிறார். இராதாவுக்குச் செய்தி வருகிறது. இவரும் போகிறார். அங்கு என்.எஸ்.கே நெற்றியில் விபூதி பூசப்பட்டுள்ளது. அதைக் கண்ட இராதா வருத்தப்படுகிறார். எவ்வளவு பகுத்தறிவு பேசிய கலைஞன்! அவருடைய நெற்றியில் திருநீறா? எனக் கவலைப்பட்ட இராதா நேராக வீட்டில் உள்ளவர்களிடம் எடுத்துச் சொல்லி விபூதியைத் துடைத்து-விட்டு, சவ ஊர்வலத்தை முன்னின்று நடத்தி-னார். அதே போல இசை மேதை இராஜரத்-தினம் இறந்த போது தன்னுடைய காரில் ஏற்றி இடுகாடு வரை சென்று சவஅடக்கம் செய்தது மட்டுமல்ல, இராஜரத்தினம் எந்த இசைக் கருவியின் மூலம் தமிழ்நாட்டில் புகழ்-பெற்றாரோ, அந்த நாதஸ்வரத்தை 43 அடியில் செய்து அவரின் சமாதியில் வைத்தவர் எம்.ஆர்.இராதா என்பதை யாரும் மறந்து-விடக்கூடாது.
ஒருமுறை செங்கல்பட்டில் அண்ணா முன்னின்று நடத்திய நடிகர்கள் மாநாட்டிற்கு பெரியார் தலைமை வகிக்கிறார். அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் மிகப் பெரிய நடிகர்கள். பி.யு.சின்னப்பா, எம்.கே. இராதா, என்.எஸ். கிருஷ்ணன் போன்றோர் எல்லாம் கலந்து கொண்டனர். அப்போது பெரியார் பேசுகிறார். நீங்க ஒவ்வொருவரும் ரூ.50,000 சம்பளம் வாங்குகிறீர்கள். இது என்ன நியாயம்? எனப் பெரியார் கேட்கிறார். நடிகர்கள் ஏற்பாடு செய்த மாநாட்டில் தான் பெரியார் இப்படிப் பேசுகிறார்.
உங்களுக்கு ரூ.50,000 சம்பளம் எனக் கேள்விப்படுகிறேன். ஆனால் விவசாயிகளுக்கு 5ரூபாய் கூட சம்பளமாகக் கொடுப்பதில்லை. நீங்கள் எல்லாம் என்ன விவசாயிகளைவிட உயர்ந்தவர்களா? எனப் பெரியார் பேசுகிறார். இதனால் நடிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பெரியார் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டுமென நடிகர்கள் முடிவு செய்கின்றனர். உடனே என்.எஸ்.கே மேடையில் ஏறி ஒரு புள்ளி விவரக் கணக்கு கூறுகிறார். அய்யா, நான் இத்தனைப் படத்தில் நடித்தேன், இவ்வளவு சம்பளம், அதில் நலிந்த நாடக நடிகர்களுக்கும் மற்றும் பலருக்கும் உதவிகள் செய்துள்ளேன் என்கிற ஒரு கணக்கைச் சொல்கிறார்.
உடனே பெரியார் ஒலிபெருக்கியின் முன்வந்து, இவ்வளவும் கேட்ட பிறகு சொல்கிறேன் கிருஷ்ணன் வாழ்க, கிருஷ்ணன் மட்டும் வாழ்க என்று கூறுகிறார். இப்படி நடிகர்களை விமர்சித்த பெரியார் தம் வாழ்வில் ஒருவருக்கு மன்றம் அமைத்தார் என்றால் அது எம்.ஆர்.இராதாவுக்குத்தான். பெரியாரே முன்னின்று இராதா மன்றம் என்ற ஒன்றை அமைத்தார். வி.பி.சிந்தன் எதிரிகளால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் கிடந்த போது, எம்.ஆர். இராதாவும் மருத்துவ-மனையில் இருந்தார். நடிப்பை விட்டுவிட்டு என்னுடனே இருக்கின்றீர்களே என வி.பி. சிந்தன் கேட்ட போது இராதா சொன்னார். எவ்வளவு பெரிய மனிதர் நீங்கள். உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதே என அருகிலேயே இருந்தார். வாழ்வில் தாம் நேசித்த எல்லா பகுதிகளையும் அப்பழுக்கற்ற முறையில் நேசித்தவர் இராதா. 1907 இல் ஓர் ஏப்ரல் மாதம் சென்னையில் எம்டன் குண்டு வெடித்த-போதுதான் இராதா பிறந்தார். பெரியார் எறிந்த ஒரு அற்புதமான எம்டன் குண்டு எம்.ஆர். இராதா சமூகத்தின் மூடத்தனங்களை, அழுக்குகளை, ஜாதியத்தை, மேலாதிக்கங்களை எதிர்க்க பெரியாரிடம் இருந்த அற்புதமான ஆயுதம் அவர். தம் வாழ்வின் முழுதும் சமரசம் செய்து கொள்ளாத, மனதில் பட்டதை வெளிப்-படையாகச் சொன்ன இராதாவைப் போன்ற கலைஞர்கள் தமிழ்நாட்டிற்கு நிறையத் தேவைப்-படுகிறார்கள்.

நால் வருணம்: படைத்தது யார்?

நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் அவற்றை, படைத்தவனாகிய நானே நினைத்தால் கூட மாற்றியமைக்க முடியாது என்று கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணன் கூறுவதாக மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.இதற்கு நேர்மாறாக மனு தர்மசாஸ்திரம் ஸ்லோகம் 87இல் பிர்மா தன் முகத்திலிருந்து பிராமணர்களையும் (பார்ப்பனர்கள்) தோளிலிருந்து சத்திரியர்களையும், தொடை-யிலிருந்து வைசியர்களையும் பாதத்திலிருந்து சூத்திரர்களையும் படைத்ததாக சொல்லப்-பட்டிருக்கிறது. ஆக 4 வருணத்தை;ம் தானே படைத்தாக கிருஷ்ணன் கூறுவது உண்மையா? அல்லது பிரம்மா படைத்தாகச் சொல்வது உண்மையா? கிருஷ்ணரின் காலம் புத்தர் காலத்திற்கு பிறகு என்று ஆராய்ச்-சியாளர்கள் கூறுகிறார்கள் அவ்வாறாயின் கிருஷ்ணன் நான்கு வர்ணத்தை எந்த வருடத்தில் உண்டு பண்ணினார். ஏற்கனவே இருந்த மக்களிடம் வர்ணபேதத்தை உண்டு பண்ணினாரா? இது உண்மையாயின் பிரம்மா தன் உடம்பின் பல்வேறு பாககங்களிலிருந்து நான்கு வர்ணத்தினைஉண்டு பண்ணினார் என்று கூறும் கூற்று அப்பட்டமான பொய் அல்லவா? பிர்மா தன் முகத்திலிருந்து பிராமணர்களையும், தோளிலிருந்து சத்திரி-யர்களையும், தொடையில் இருந்து வைசியர்-களையும், பாதத்திலிருந்து சூத்திரர்-களையும் படைத்தார் என்று சொல்பவர்கள் எந்த ஆண்டு, எந்த மாதம் அவ்வாறு பிரம்மா படைத்தார். ஒவ்வொரு வருணத்திலும் எத்தனை எத்தனை பேரை படைத்தார். அதாவது என்ன விகிதத்தில் படைத்தார். அதில் ஆண் எவ்வளவு? பெண் எவ்-வளவு? குழந்தைகளாக படைத்தாரா? பெரியவர்களாகவே படைத்தாரா? போன்ற விவரங்கள் சொல்ல வேண்டாமா? அவ்வாறு பிரம்மா படைப்பதற்கு முன் பூமியில் மனித இனம் இருந்ததா? இல்லையா? பிரம்மா நான்கு வர்ண மக்களை படைத்தார் என்றால் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா போன்ற இதர நாட்டு மக்களை யார் படைத்தது? அங்கெல்லாம் நான்கு வர்ண பேதம் இல்லாதது ஏன்? கங்கைக் கரையை தவிர வேறு நாடுகள் உலகத்தில் உள்ள விவரம் பிரம்மாவிற்கும், கிருஷ்ணனுக்-கும் தெரியாததாலா? ஆக பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத திராவிட மக்களை ஏமாற்றுவதற்காக அவ்வப்-பொழுது புதிது புதிதாக கதை கட்டி அதை மக்களை நம்பச் செய்வதற்காக அவ்வப்பொழுது ஆட்சியிலிருப்-பவர்-களின் தயவைப் பெற்று பரப்பி வந்தததுடன் மாற்று கருத்துக் கொண்டவர்களை அதிகார வர்க்கத்-தினை கொண்டு மிரட்டி-யும், சாதுக்கள் போர்-வையில் கொலைகள் செய்தும் வந்துள்ள-னர், வருகின்றனர்.எனவே நான்கு வர்ணங்-களை பிரம்மா/கிருஷ்ணன் படைத்ததாக கூறும் கூற்று அப்பட்ட-மான பொய் என்பது புரிகிறதா?

ஜாதிப் பித்தலாட்டம்

ஜாதி என்பது சுத்தப் புரட்டு. அயோக்கியர்-களால் கற்பிக்கப்பட்டு, முட்டாள்களால் ஒப்புக்-கொள்ளப்பட்டு, மானமற்ற மக்களால் நடை-முறையில் பின்பற்றச் செய்யப்பட்டு வருகிறது.

மத சாஸ்திரப்படியாக நான்கு ஜாதிகள் சொல்லப்பட்டாலும், இவற்றுள் மூன்று ஜாதிகள்தான் பிறவியினால் இருப்பதாகச் சொல்லப்படுபவைகளாம். அவை மற்றபடி இரண்டாவது சத்திரிய, மூன்றாவது வைசிய, நான்காவது சூத்திரர்கள் எனப்படுபவையாகும். முதலாவது ஜாதி என்று சொல்லப்படும் பிராமண ஜாதி என்பது பிறவியால் ஏற்-பட்டதல்ல என்பதோடு, பிறவியல் பிராமணன் என்பவனும் இல்லை. ஒரு மனிதன் பிராமணன் என்று சொல்லப்படுபவனுக்குப் பிறந்தவன் ஆனாலும் சூத்திரனேயாவான். அந்த சூத்திரன் என்கிற பிள்ளை உபநயனம் என்ற கருமம் செய்யப்பட்டு பூணூல் என்கின்ற முப்புரி நூல் அணியப்பட்ட பின்புதான் பிராமணன் ஆகிறான். அதனால்தான் பார்ப்பனர் தங்களைத் துவிஜர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இரு பிறவியாளர் என்று கூறுகிறார்கள்.

அந்த அப்படிப்பட்ட இரு பிறப்பாளன் ஆன பிராமணன் என்பவனும், மற்ற ஜாதியார்களைப் போல் பிறவி காரணமாகவே எப்போதும் பிரா-மணனாய் இருப்பவனல்ல அவன் பிராமணன் செய்ய வேண்டிய சில கருமங்களைச் செய்யாத-தால், பிராமணத் தன்மையை இழந்து விடு-கிறான். மற்றும் சில கருமங்கள்,காரியங்கள் செய்-வதினாலும் பிராமணத்தன்மையை இழந்து விடு-கிறான். இதனால் பிராமணன் என்கின்றவன், சில காரியம், கருமம் செய்யாததனாலும், சில காரியங்கள் செய்வதனாலும் பிராமணத்தன்-மையை இழந்து விடுகிறான் என்கின்ற தத்துவப்-படிப் பார்த்தால் உலகில் பிறவிப் பிராமணன் இல்லை என்பதோடு, சில கருமத்தைச் செய்யாத-தாலும், சில கருமத்தைச் செய்வதாலும் பிரா-மணன் அல்லாதவனாக, பிராமணத் தன்மையை இழந்-தவன் என்பதாக, ஆகிவிடுவதால் உலகத்தில் பிராமணன் என்பவன், மத, சாஸ்திர தர்மப்படி பிராமணன் என்பதாக எவனும் இல்லை என்று உறுதியாய்ச் சொல்லலாம். அன்றியும், இந்தத் தர்மப்படி உலகில் எவனும் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொண்டாலும், அவன் கண்டிப்பாக பித்தலாட்டக்காரனேயாவான். மக்களை ஏமாற்றி வஞ்சித்துப் பிழைக்கிற அயோக்கியனே ஆவான்.

ஏன் இதை இவ்வளவு வலியுறுத்திச் சொல்லு-கிறேன் என்றால், தங்களைப் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், ``உலகில் நான்கு ஜாதிகள் இருந்தாலும், மத, சாஸ்திர தர்மப்படி இரண்டு ஜாதிகள் தான் இருக்கின்றன. அதாவது, பிராமணன், சூத்திரன் என்பவர்கள் தான் இருக்கிறார்கள். மற்ற இரண்டு ஜாதியான சத்திரியர், வைசியர் என்று சொல்லப்படும் இரண்டு ஜாதிகளும் கலியுகத்தில் அழிந்து விட்டது என்று சொல்லிவிட்டார்கள். சொன்னதோடு மாத்திரமல்லாமல் அவர்கள் ``சூத்திர மக்களோடேயே சேர்ந்து விட்டார்-கள். ஜாதி பிரிவு முறையில் சத்திரிய, வைசிய ஜாதி என்பதற்காக எந்தப் பாகுபாடும் செய்ய-வில்லை. ஆகவே, நான்கு ஜாதிகளில் இரண்டு ஜாதிகள் ஒழிந்துவிட்டன. அதாவது, பார்ப்-பனர்-களால் ஒழிக்கப்பட்டு விட்டது. மீதி உள்ள இரண்டு ஜாதிகளில், மத, சாஸ்திர தர்மப்படி பிராமணன் என்கிற ஜாதி இல்லாததினால் ஜாதி தத்துவப்படி உலகில் இந்துக்கள் என்-பவர்களில் ஒரு ஜாதிதான் இருக்கிறது என்-றாலும், அந்த சத்திரிய ஜாதியும், ஜாதி தர்மப்-படி நடக்காததனால் அதுவும் (சத்திரிய ஜாதி-யும்) இல்லாமல் போனது என்றே சொல்ல வேண்டும்.

மத, சாஸ்திர, தர்ம ஆதாரம் இல்லாமல் பிரிவினை செய்யப்பட்ட பஞ்சமர் (சண்-டாளர்) என்று பிரிவினை செய்யப்பட்ட அய்ந்-தாம் ஜாதியும் இன்று ஆட்சியின் பலனாக அழிக்கப்பட்டு விட்டபடியால், தாழ்த்தப்-பட்ட வகுப்பு என்று அந்தக் குறிப்பிட்ட தன்-மையும் இல்லாமல் போய் மற்ற ஜாதிகளுடன் சரிசம அந்தஸ்து கொடுக்கப்பட்டு விட்டது என்றாலும், இன்று பார்ப்பனர் என்னும் வகுப்பார் தங்களைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்கிறார்களே இது பொருந்-துமா? நியாயமா? என்பது சிந்திக்க வேண்டி-யிருக்-கிறது.

தங்களைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்பவர்கள் வேசத்தில் காட்டிக் கொள்வ-தன்மூலம்தான் சொல்லிக் கொள்கிறார்களே தவிர, அதில் நாணயமோ, யோக்கியமோ இருக்-கிறதா என்று பார்க்க வேண்டும்.

சங்கராச்சாரி என்பவரும் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொண்டு நம்மை தொட்டால் ஸ்நானம் செய்ய-வேண்டும், பிராயச் சித்தம் செய்துகொள்ள வேண்டும் என்கிறார். வா.வே.சு. அய்யர், சி. விஜய-ராகவாச்சாரியார் போன்ற பார்ப்பனர் நம்மை தொட்டு விட்டால் நம்ம வீட்டில் சாப்பிட்டு விட்டால் ஸ்நானம் செய்ய-வேண்டும் பிராயச் சித்தம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லி அந்தப்படி நடந்து-கொண்டு வந்தார்கள், வருகிறார்கள். மற்றும் சி. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி), சதா-சிவம் ஆகிய பார்ப்பனர் யார் வீட்டிலும் பஞ்சமர் (சண்டாளர்), ஜாதியார் வீட்டிலும் சாப்பிடுகிறார்கள். தன் மகளை சூத்திரர்-களுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறார்கள். தானும் சூத்திர ஜாதிப் பெண், நாடகத்தில் நடித்துக் கொண்டு, ``பொதுப் பெண்டீர் குலத்தை சார்ந்து இருந்தவரை மணம் செய்து உடல் சம்பந்தம் வைத்துக் கொண்டும் இருந்து, உச்சிக்குடுமி வைத்துக் கொண்டும், பஞ்ச கச்சம் போட்டு உடை உடுத்திக் கொண்டும், தன்னை பிராமணன் என்றே சொல்லிக் கொண்டு மற்ற பிராமணருடன் உண்பன, தின்பன, கொடுத்-தல், கொள்ளல் காரியங்களையும் செய்து-கொண்டு, தன்னை பிராமணனாக நினைத்துக்-கொண்டு மற்ற ஜாதியாருக்கு ஆசீர்வாதம் செய்துகொண்டு இருக்கிறார்கள். இவை மாத்திரம் அல்லாமல், இப்படிப்பட்டவர்கள் செத்துப் போன பின்பும் அவர்கள் இனத் தலைவர்கள் ``பிராமண பிரேதம் என்பதற்கு என்ன கர்மங்கள் மந்திரங்கள் உண்டோ அந்த சடங்குகளையும், அந்த ஜாதி சாஸ்திரிகளா-லேயே செய்கிறார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், ஒரு மனிதன் தன்னை பிராமணன் என்றும், மற்றவர்-களைத் தனக்குக் கீழ்ப்பட்ட ஜாதி, கீழான ஜாதி என்றும் சொல்லுவதற்கு பார்ப்பனக் கூட்டத்-தில் இருந்து கொண்டு மற்றவர்களை இழி ஜாதியான் என்று சொல்லிக் கொண்டு பூணூல் போட்டுக் கொண்டு இருந்தால் மாத்திரமே போதுமானதாக இருந்து வருகிறது.

இதில் விசேசமான மற்றொரு காரியம் என்னவென்றால், மது அருந்துகிறான், மாமிசம் சாப்பிடுகிறான், கூட்டிக் கொடுப்பதையே தொழிலாகக் கொள்கிறான், பேர் போன ``விபசாரியை மனைவியாக, போகப் பெண்-ணாகக் கொள்கிறான், அனுபவிக்கிறான்; இப்படிப்பட்டவன் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறான். பிராமணார்த்தத்-திற்குச் சென்று பயன் பெற்று வருகிறான்.

ஆகவே, நாட்டில் பொது மக்களை அயோக்கியர்கள், ஜாதி என்னும் பெயரால் மனதறிந்து பலர் ஏமாற்றி கீழ்மகனாக ஆக்கி சுயநலம் அனுபவித்து வருகிறார்கள்.

(உண்மை, 14.1.1973)

Monday, November 9, 2009

மனித இனம் முதலில் தோன்றிய கடல் கொண்ட குமரிக் கண்டம்

'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்' என்று சொல்வார்கள். இப்படி வந்தவர்களை வாழ வைத்ததனால் தானோ என்னவோ தமிழன் தனது இனம், மொழி, கலாச்சார பெருமைகளை மறந்து விட்டான். அதைவிட தான் இழந்த பெருமைகளைப் பற்றி அறிய கூட ஆர்வம் காட்டாதவனாய் இருக்கிறான் என்றால் என்ன சொல்வது ?

தமிழனின் நாகரீகம்

தமிழனின் மறதியை பயன்படுத்திக் கொண்டு இந்திய வரலாற்றின் பல உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டன. இந்தியாவை பொறுத்தவரை சிந்து சமவெளி நாகரீகம் தான் மிகவும்
பழமையானது என்கிறது வரலாறு. ஆனால் அதற்கெல்லாம் முன்தோன்றிய மூத்த நாகரீகம் தமிழனின் நாகரீகம். இதற்கான ஆதாரங்களைத் தான் கடல் கொண்டு விட்டது.

ஆம்! குமரி கடலின் அடியில் உள்ள லெமூரியா கண்டம் என்ற குமரிக் கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான். லெமூர் என்றால் பரிணாம வளர்ச்சியில் குரங்கிற்கும், மனிதனுக்கும் இடைப்பட்டவன் என்று பொருள். ஆக உலகின் முதல் பரிணாம வளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது.

சிவா நடனம்

குமரியில் கடல் கொண்ட இடம் 49 ஆயிரம் சதுர மைல் என்கிறார்கள். கடல் கொண்ட குமரிக் கண்டத்தின் மேற்கு எல்லை ஆஸ்திரேலியா. கிழக்கு எல்லை ஆப்பிரிக்கா. தெற்கு எல்லை அண்டார்டிகா.

ஒரு காலத்தில் இவை அனைத்தும் ஒன்றாக இருந்திருக்கின்றன. நாளாவட்டத்தில் கடல் கொண்டு அவற்றை பிரித்திருக்கிறது. இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, மனிதயியல் ஆராய்ச்சியாளர்கள் தமிழர்களுக்கும், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா பழங்குடிகளுக்கும் பல ஒற்றுமைகளை கூறுகிறார்கள்.

குறிப்பாக, ஆஸ்திரேலியா நாட்டின் பழங்குடியினர் இன்னும் 'சிவா நடனம்' என்ற பழம்பெரும் தமிழர் நடனத்தை ஆடுகிறார்கள். நெற்றியில் கண் வைத்துக் கொண்டு முக்கண்ணுடன் ஆடுகிறார்கள். வன உயிர்களை வேட்டையாட அவர்களை 'பூமராங்' என்ற ஆயூதத்தை பயன்படுத்துகிறார்கள். இது எதிரியை தாக்கி விட்டு திருப்பி வந்து விடும். இந்த பூமராங்கை இன்னும் ஊட்டி, கொடைக்கானல் பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள்.

பாட்டி / அவல்

அதுபோல் ஆப்பிரிக்க பழங்குடியினருக்கும், தமிழர்களுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அவர்கள் குடும்பங்களில் வயதானவர்களை நாம் அழைப்பது போல் 'பாட்டி' என்று
அழைக்கிறார்கள். அவல் என்ற பெயரை உபயோகிக்கிறார்கள். நமது மீனவர்கள் நாட்டு படகை தெப்பம், மிதப்பு என்று சொல்வது போல் ஆப்பிரிக்க பழங்குடியினரும் சொல்வது அந்த நாட்களில் அனைத்து பகுதிகளும் ஒன்றாக இருந்ததற்கான அடையாளம் என்று
ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

தாய்மாமன் / அம்மி, உரல்

எனவே ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா பழங்குடியினர் கலாச்சார ரீதியாக நம்முடன் ஒத்திருக்கிறார்கள். மெக்சிகோ நகரில் சிவப்பு இந்தியர்கள் (மயன்) சிறுபயற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். நாம் அனைத்து விழாக்களிலும் தாய் மாமனுக்கு முக்கியத்துவம்
கொடுப்பது போல் அவர்களும் கொடுக்கிறார்கள். தமிழன் பயன்படுத்தும் அம்மியும், உரல்களும் அங்கு சகஜம். இவையெல்லாம் ஒரு காலத்தில் அனைத்து பகுதிகளும் ஒன்றாக
இருந்திருக்கிறது என்ற வாதத்திற்கு வலுவூட்டுவதாய் அமைந்தி ருக்கிறது.

ஆடு மேய்ச்சான் பாறை

ஆடு மேய்ச்சான் பாறை உள்ள இப்போதைய குமரி மாவட்டத்திலும் கூட பல உதாரணங்களை சொல்லலாம். குமரி மாவட்டத்தில் திருமணம் முடித்த தம்பதிகள் 'திரைகாணும் முன் தேரை காணனும்' என்பது மரபு. அதாவது கடலை பார்க்கும் முன்பு சுžந்திரம் தேரை
பார்க்க வேண்டும். இதற்கு காரணம் தங்களது முன்னோர்களை கடல் கொண்டு விட்டதால் ஏற்பட்ட ஆத்திரம் என்பது வரலாறு.

குளச்சல் துறை முகத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரம் கடலில் ஒரு சிறிய பாறை தென்படும். இதை 'ஆடு மேய்ச்சான் பாறை' என்று கூறுகிறார்கள். கடல் வழியாக எப்படி ஆடுகளை கொண்டு செல்ல முடியும்? அப்படியென்றால் பல வருடங்களுக்கு முன்பு அந்த இடம்
தரையாக இருந்திருக்கும். மக்கள் ஆடுகளை மேய்த்திருப்பார்கள். கடல் கொண்டு விட்ட பின்னரும் இன்னும் ஆடு மேய்ச்சான் பாறை என்றே வழங்குகிறது.

பக்ரூளி ஆறு

குமரிக் கண்டத்தில் பக்ரூளி ஆறு ஓடியதாக வரலாறு. குமரி மாவட்டத்தில் பரளி ஆறு ஓடுகிறது. பக்ரூளி தான் பரளியாக மருவி இருக்கிறது. அதுபோல் பழையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள
முதல் அணைக்கட்டில் பக்ரூளி ஆறு அணைக்கட்டு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் ஓடியதன் நினைவாக பரளி ஆறு என்று பெயரிட்டிருக்கலாம். அல்லது இந்த ஆறே அங்கும் ஓடி இருக்கலாம். ஆராய்ச்சியாளர்களுக்கே வெளிச்சம்.

காரணம், 1960-ம் ஆண்டு கடல் ஆராய்ச்சி செய்யும் போது குளச்சல் பகுதி கடலுக்கு அடியில் மலைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். எனவே அது மேற்கு தொடர்ச்சி மலைதான். கடல் கொள்ளுவதற்கு முன் மலை ஆஸ்திரேலியா வரை பரவி இருந்தது என்று கூறப்படுகிறது.

குமரிகோடு

குமரிக் கண்டத்தில் குமரிகோடு என்ற இடம் இருந்ததாக வரலாறு. இதையொட்டிதான் தற்போதைய குமரி மாவட்டத்தில் விளவன் கோடு, அதன்கோடு, ஆண்டுகோடு, இடைகோடு, மெக்கோடு, நெட்டன்கோடு, திருவிதாங்கோடு, பரகோடு, வெள்ளைக்கோடு, கட்டிமன்கோடு என்று ஊர்களுக்கு பெயரிடப்பட்டது. சங்கம் வளர்த்த தமிழ் குமரிக் கண்டம் தான் உலகில் முதன் முதலில் தோன்றியது என்பதற்கு இன்னொரு அடையாளம் குமரி என்ற பெயர் பல
கண்டங்களில் இருப்பது. குறிப்பாக, ஆப்பிரிக்கா அருகே மடகாஸ்கர் தீவிற்கு குமர் என்று பெயர். இங்கு வாழும் மக்கள் கொம்ரி என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், மொசாம்பி ஆகிய இடங்களுக்கு இடையேயுள்ள தீவை கோமர் அல்லது கோம்ரான் என்று அழைக்கிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி கோம்ரூல்
என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. எனவே இவற்றிற்கெல்லாம் தோற்றுவாய் குமரிதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நாம் குமரி அம்மனை வணங்குகிறோம். 6-வது நூற்றாண்டில் கம்போடியாவில் குமரி அம்மனை வழிபட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

சிலப்பதிகாரத்தில் குமரிக்கண்டம்

குமரிக் கண்டத்தை கடல் கொண்டதற்கான ஆதாரம் சிலப்பதிகாரத்தில் வருகிறது. 'பக்ரூளி ஆற்றுடன் பண்மலை அடுக்கத்து குமரி கோடும் கொடுங்கடல் கொள்ள' என்று தொல்காப்பியர் எழுதுகிறார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை தமிழனுக்கே உண்டு. உலகில் வேறு எந்த மொழிக்கும் சங்கம் இருந்ததாக வரலாறு இல்லை. முதல் தமிழ்ச் சங்கம் குமரிக் கண்டத்தில் தென் மதுரையில் இருந்ததாக வரலாறு. அதை கடல் கொள்ளவே கபாட புரத்தில் 2-ம் தமிழ்ச் சங்கம் இயங்கியது. இங்குதான் சிலப்பதிகார சம்பவங்கள் நடந்தன. இதை எழுதிய தொல்காப்பியர், அரங்கேற்ற உதவிய அதங்கோடு ஆசான்,
தற்போதைய குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

எனவேதான் கடல் கொண்டு பல ஓலை சுவடிகள் அழிந்தாலும் 2-ம் தமிழ்ச் சங்க கடைசி காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரம் நமக்கு கிடைத்தது.

ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுமா?

இப்படி உலகில் முதல் மனிதன் தோன்றிய இடத்தை, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழனின் பூர்வீக இடத்தை இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். 19-ம் நூற்றாண்டில் சேலஞ்சர் என்ற கப்பல் கடலாய்வு செய்தது. 1889-ம் ஆண்டு ஜெர்மனின் பேஷல் என்ற கப்பலும், ரஷ்யாவின் வித்யசு என்ற கப்பலும் கூட கடலாய்வு செய்தது.

இறுதியாக 1960-ம் ஆண்டு அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக குமரிக் கண்டத்தை ஆராய்ந்தது. அப்போது தான் கடலுக்குள் மலை இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு 38 ஆண்டுகளாக குமரிக் கண்ட கடலாய்வு பணிகள் முடங்கி விட்டன.

கடலாய்வு செய்வதினால் பல அற்புதங்களை பூம்பூகார் நகரம் வெளிப்படுத்தியுள்ளது. அதை விட பல மடங்கு அற்புதங்கள் குமரிக் கண்டத்தில் உள்ளன. இதை கடலாய்வு செய்தால் உலக வரலாறே ஒட்டுமொத்தமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதற்காக நாகர்கோவிலைச் சேர்ந்த டாக்டர் எஸ். பத்மநாபன் 30 ஆண்டுகளாக கடலாய்வு செய்ய வேண்டும் என்று பல கோரிக்கைகள், கருத்தரங்குகள் நடத்தி வருகிறார்.

Tuesday, September 1, 2009

அம்பேத்கர் மறைவு செய்தி கேட்ட பெரியார்!!!!

இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும்,ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்திவிட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன்!!உலகத்தரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை,வெகு சாதாரணமாக மதித்ததோடு,அவருடைய பல கருத்துக்களை சின்னாபின்னமாகும்படி மக்களிடம் விளக்கம் மேதாவியாக இருந்தார்.இந்துமதம் என்பதான ஆரிய-ஆத்திக மதக்கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும்,ஆபாசமாகவும்.அர்த்தமற்றதாகவும் மக்கள் கருதும்படியாக பேசியும் எழுதியும் வந்தார்.உதாராணம் சொல்ல வேண்டும்மானால்,காந்தியாரையே ஒரு பத்தாம் பசிலி பிற்போக்கு வாதி என்றும் அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டு வந்த கீதையே முட்டாளின் உளறல்கள் என்றும் சொன்னதோடு,காந்தியாரின் கடவுளான இராமனை மகாக் கொடியவன் என்றும் இராமணக் காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லி பல்லாயிரக்கணக்கான மக்களிடையில் இராமாயணத்தை சுட்டு எரித்தும்ச் சாம்பலாக்கினார்! இந்துமதம் உள்ளவரையில் தீண்டாமையும் சாதிப் பிரிவும் அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார்! மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் தழுவும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார்,இப்படியாக அநேக அரிய காரியங்களை செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவாதியும்,ஆராய்ச்சி நிருபுணரும்,சீர்திருத்தப் புரட்சி வீரருமான டாக்டர் அம்பேதகர் முடிவு எய்தியது இந்தியாவுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ,பகுத்தறிவு வளச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்.அம்பேத்கரின் மறைவு எனும் செய்தி திடிரென்று மொட்டையாக வெளியானதிலிருந்து,அவரது மரணத்துக்குப் பின்னர் சில இரகசியங்கள் இருக்கலாம்மென்று கருதுகிறேன்.அதாவது காந்தியார் மரணத்திற்க்கு உண்டான காரணங்களும் அதற்க்கு ஆதாரமான பல சங்கதிகளும் ,டாக்டர் அம்பேதகர் மரணத்திற்க்கும் இருக்கக் கூடும் என்பதேஆகும்.

பெரியார் இப்படி குறிப்பிட்டது விடுதலை 8-12-1956 யில்....

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு....

"எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது."

1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே சமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக 24-9-1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே “புனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். 1951-ம் ஆண்டு “இந்து சட்டத் தொகுப்பு மசோதா’ அறிமுகப்படுத்தப்பட்டபொழுது அதனை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ல் காலமானார்.

காலம் காலமாக சமூக ரீதியாகப் பின் தங்கியுள்ள மக்களைக் கைதூக்கி விடக் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு, அடித்தட்டு மக்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஓரளவுக்கு முன்னேற வாய்ப்பளித்துள்ளது. அதே சமயம் கல்லாமை இருளில் மூழ்கியுள்ள தலித் மக்கள், குறிப்பாக தலித் பெண்கள் இதனால் போதிய பலன் அடையவில்லை. இந்நிலையில் இடஒதுக்கீட்டின் அடிப்படைக்கு வேட்டு வைக்கும் நிலையில் அவ்வப்பொழுது வெளியிடப்பட்டு வரும் நீதிமன்றத் தீர்ப்புகளால் இதன் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. உலகமயமாக்கல் பின்னணியில் இட ஒதுக்கீடு மூலம் வேலை வாய்ப்பளிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருவதால், வேலை வாய்ப்பு பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உலகமயமாக்கல் எதிர்ப்புப் போராட்டத்தில் சமூக நீதிக்காக போராடும் சக்திகளும் ஒருங்கிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.டாக்டர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சாசனம் தலித் மக்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனாலும், சட்ட உரிமைகள் மீறலும், மனித உரிமை மீறலும், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் தொடர் கதைகளாக உள்ளன. இதனை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும்.தலித் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், குடியிருப்புகள் என ஒருங்கிணைந்த வகையில் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை முழுமையாக அமலாக்கப்பட வேண்டும். இப்பகுதி மக்களுக்கென ஒதுக்கப்படும் நிதி முழுமையாக செலவழிக்கப் பட வேண்டும். இவர்களின் நில உரிமை காக்கப்பட வேண்டும். சமூக சமத்துவம் மலர பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுவே டாக்டர் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.